சென்னை நவ, 11
பிரபல நடிகர் கங்கா (வயது 63) காலமானார். டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான உயிருள்ளவரை உஷா எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர். கங்கா பிறகு கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து பிரபலமானவர். நடிப்பில் இருந்து விலகி தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.