சென்னை நவ, 9
ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபலமான கார்த்திகை தீபம் தொடரின் கதாநாயகி அர்த்திகா தனது காதலனை திருமணம் புரிந்தார். கேரளாவைச் சேர்ந்த அர்த்திகாவின் திருமணம் சென்னையில் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நடந்து முடிந்தது. தனது திருமண தொடர்பான புகைப்படங்களை அர்த்திக்கா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.