சென்னை நவ, 10
அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அமைச்சர் மான்சுக் மண்டாவியாவிற்கு எழுதிய கடிதத்தில் 69 எம்டி மற்றும் எம்எஸ் இடங்கள், 11 டிஎன்பி இடங்கள், 48 எம்டிஎஸ் காலி இடங்களை நிரப்புவதற்கு கலந்தாய்வு நடத்த அனுமதிக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.