சென்னை நவ, 5
ஜார்க்கண்டில் உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர் மதன்குமாரின் குடும்பத்திற்கு ரூபாய் மூன்று லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவரது அறிக்கையில் மதன் குமாரின் மர்ம மரணம் குறித்து ஜார்கண்ட் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் இறப்புக்கு நீதி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் ஹேமந்த் சோரனை வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.