புதுடெல்லி அக், 30
இந்தியா-இங்கிலாந்து இடையேயான உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 129 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறியது. ரோகித் சர்மாவின் நூறாவது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது.