புதுடெல்லி அக், 27
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் கனிம உற்பத்தி 12.3% அதிகரித்துள்ளதாக இந்திய சுரங்க அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. IBM வெளியிட்டுள்ள குறிப்பில், கனிம துறையின் வளர்ச்சி 8.3 சதவீதமாக உள்ளது. நாட்டின் நிலக்கரி உற்பத்தி 68.4 கோடி டன்னாக இருந்தது. லிக்னைட் 28 லட்சம் டன்னும், பாக்சைட் 14.28 லட்சம் டன்னும் உற்பத்தி செய்யப்பட்டது. 2022 ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் 12.3 சதவீதம் அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது.