திருப்பதி அக், 23
உலகம் முழுவதிலும் இருந்து ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் திருப்பதியில் சர்வதேச தரத்தில் ரூ.299 கோடி மதிப்பில் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்காக பழைய கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் முடிந்து வரும் 2025 ல் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.