மும்பை அக், 16
மத்திய கல்வி அமைச்சகம் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை ஒவ்வொரு மாணவருக்கும் ‘தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு ‘APAAR’ அடையாள எண்ணை உருவாக்க திட்டமிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை(NEP) 2020ன் ஒரு பகுதியாக இந்த ஐடி மூலம் மாணவர்களின் மதிப்பெண்கள், சாதனைகள் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள முடியும். இந்த திட்டம் பெற்றோர்கள் ஒப்புதலோடு விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.