புதுடெல்லி அக், 11
காவிரியில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து தமிழகத்தில் உள்ள எட்டு டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவை தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளதால், அதிக அளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.