புதுடெல்லி அக், 11
பரபரப்பான சூழலில் இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 88வது கூட்டம் டெல்லியின் நடைபெறுகிறது. தமிழ்நாடு சார்பாக நேற்று முன்தினம் காவிரி தண்ணீரை திறந்து விட தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதேபோன்று கர்நாடகா சட்டமன்றத்தில், இங்கு வறட்சி நிலவுவதால் தண்ணீர் திறக்கப் போவதில்லை என்று தீர்மானம் கொண்டு வர உள்ளதாக நேற்று கர்நாடகாவில் துணை முதலமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த கூட்டம் இன்று நடைபெறுகிறது.