சென்னை அக், 11
காவிரி தண்ணீரின்றி பயிர்கள் கருகிக் கொண்டிருக்கும் என்று வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை குழுவும் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்று சொல்லியும் கூட கர்நாடகா அரசு அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை. இதனால் மூன்றரை லட்சம் பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்ற துயரமான சூழ்நிலையில் தமிழ்நாடு தவித்துக் கொண்டிருக்கிறது என்றார்.