பெங்களூரு அக், 11
ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பெங்களூரில் இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் 12,600 சைபர் கிரைம் குற்றங்கள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரூ.470 கோடியை பலபேர் இழந்துள்ளதாகவும், முக்கியமாக ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.204 கோடி மோசடி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆன்லைன் வேலை மோசடி மூலம் தினசரி ரூ.1.71 கோடி வரை மர்ம நபர்கள் ஏமாற்றி வந்துள்ளனர்.