புதுச்சேரி அக், 9
தமிழ்நாடு-கர்நாடகா இடையே கடந்த சில மாதங்களாக காவிரி தண்ணீரை பங்கிடுவதில் பிரச்சனை நிலவி வருகிறது. இது குறித்து தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் நாடி வருகிறது. இந்நிலையில் காவிரி பிரச்சனையை சட்டரீதியாக மட்டுமின்றி நட்பு ரீதியாகவும் தமிழ்நாடு எதிர்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.