மும்பை அக், 4
மும்பை ஐஐடி விடுதியில் சைவம் சாப்பிடு மாணவர்களுக்கு என தனி மேஜைகள் ஒதுக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மூன்று விடுதிகளில் சைவம் சாப்பிடும் மாணவர்கள் மட்டும் அமர வேண்டும் என்று தனியாக ஆறு மேஜைகள் ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஐஐடி நிர்வாகம் ரூபாய் 10,000 அபராதம் விதித்தது. இச்சம்பவம் ஐஐடி வளாகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.