மும்பை அக், 4
ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் தொடரில் அல் நாசர் அணி அபார வெற்றி பெற்றது. நேற்றைய லீக் ஆட்டத்தில் அல் நாசர் இஸ்டிக்லோல் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ரொனால்டோ மிரட்டலாக கோல் அடித்து அசத்தினார். இதனால் போட்டி முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் அல்நாசர் அணி மகத்தான வெற்றியை பதிவு செய்தது. மேலும் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பலமாக உள்ளது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.