புதுடெல்லி அக், 3
ஆளுநர் மாளிகையில் நேற்று சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, தியாகிகள் ஆளுநர் மாளிகைக்கு வந்தது மாளிகைக்கு பெருமை. அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் இருப்பதை உறுதி செய்து ஆவணங்களை சேகரித்துள்ளோம். ஆளுநர் மாளிகை, சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான வீடு. உங்களுக்காக மாளிகை கதவு எப்போதும் திறந்திருக்கும் என பேசினார்.