புதுடெல்லி அக், 4
2024 ல் நாசா, ஆர்ட்டெமிஸ் -2 ஏவுகணை மூலம் நிலவுக்கு 4 விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளது. இந்தப் பயணத்தில் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்காமல் நிலவின் மேற்பரப்பிலிருந்து 900 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிவர உள்ளனர். இந்த முயற்சி வெற்றி பெற்றால் பிரபஞ்சத்தில் மனிதன் பயணித்த மிக நீண்ட தூரமாக இது இருக்கும். மீண்டும் 2025ல் விண்வெளி வீரர்கள் தென்துருவத்தில் கால் பதிப்பார்கள் என நாசா தெரிவித்துள்ளது.