புதுடெல்லி அக், 1
நாடு முழுவதும் 6.4 லட்சம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு தூய்மைப் பணிகள் நடைபெற உள்ளது. இன்று காலை 10 மணிக்கு தூய்மை பணி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதிக குப்பைகள் குவிந்து கிடைக்கும் இடங்கள், ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலை ஓரங்கள், நீர்நிலைகள், சந்தைகள், சுற்றுலாத் தலங்கள் என பெரும்பாலான இடங்களில் தூய்மைப் பணி நடைபெறுகிறது.