புதுடெல்லி அக், 2
இந்தாண்டு செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் தொடர்பான விவரங்களை மத்திய அமைச்சகம் நேற்று வெளியிட்டது. தமிழகத்தில் இருந்து மொத்தம் ரூ.10,481 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு விட 21 சதவீதம் அதிகம். கடந்த 2020 செப்டம்பரில் ரூ.8,637 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியிருந்தது. மேலும் நடப்பு நிதி ஆண்டில் நாடு முழுவதும் நான்காவது முறையாக ஜிஎஸ்டி வருவாய் 1.60 லட்சம் கோடியை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.