புதுடெல்லி அக், 1
ஆன்லைன் விளையாட்டு கேசினோ குதிரைப் பந்தயம் ஆகியவைக்கு விதிக்கப்பட்டுள்ள 28% ஜிஎஸ்டி வரி வசூல் திருத்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் இதற்கு முன் 18 % ஜிஎஸ்டி வரம்புக்குள் இருந்த ஆன்லைன் விளையாட்டு துறை வெறும் இரண்டு முதல் மூன்று சதவீதம் வரி செலுத்தி வந்தது. இந்நிலையில் இந்த 28% ஜிஎஸ்டி வரி மூலம் அரசுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.