கேரளா அக், 1
கேரளா, கோழிக்கோடு கடற்கரையில் 50 அடி நீலத்திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியது. நேற்று காலை 10 மணி அளவில் இந்த சம்பவ நிகழ்ந்தது. பெரிய திமிங்கலம் என்பதால் அதை காண ஏராளமான மக்கள் கடற்கரையில் கூடினர். இறந்த திமிங்கிலத்தை ஆய்வு மீன்வளத்துறை அதிகாரிகள், நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். மேலும் திமிங்கலத்தை புதைக்க முடிவு செய்து அதற்கான பணிகள் நேற்று இரவு வரை நடைபெற்றது.