Spread the love

துபாய் செப், 28

நமது வணக்கம் பாரதம் வார இதழ் மற்றும் வணக்கம் பாரதம் 24×7 Online news அமீரகப் பிரிவின் இணை ஆசிரியர் நஜிம் மரைக்கா புனித பயணமான மக்கா பயணம் (உம்ரா) மேற்கொண்டிருக்கிறார். மேலும் அவரது பயணம் இனிமையாக நிறைவடைய வணக்கம் பாரதம் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் அமீரக இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா அவர்கள் இப்பயணம் குறித்து நம் உரையாடும்போது, உலக மக்கள் அமைதிக்காகவும் நாட்டு நலனுக்காகவும் அனைவரின் உடல் நல ஆரோக்கியத்திற்காகவும் நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்தார்.

இவரது புனிதப் பயணம் கீழக்கரை Sunshine ஹஜ் சர்வீஸ் மூலமாக மேற்கொண்டுள்ளார். கீழக்கரை, திருச்சி, சென்னை Sun Shine Haj service இயக்குனர் நவ்ஷாத் அவர்கள் நமது இணை ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினரை ஜித்தாவில் வரவேற்று மெக்காவுக்கு அழைத்து சென்றார்.

இஸ்லாமியர்களின் புனித பயணமாக கருதப்படும் உமரா என்னும் ஹஜ் பயணம் 15 நாட்கள் நடைபெறுகிறது. உலக இஸ்லாமியர்களின் பல கோடி பேர் இந்த புனித பயணத்தை மேற்கொள்கின்றனர். குறிப்பிட்ட நாடுகள் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளில் இருந்து மக்காவுக்கு இந்த புனித யாத்திரை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் குறைந்தது 8 முதல் 9 தினங்கள் மக்காவிலும் நான்கு முதல் ஐந்து தினங்கள் மதினாவிலும் யாத்திரை மேற்கொண்டு 15 நாட்கள் புனித யாத்திரையை நிறைவு செய்கின்றனர். இந்த புனித பயணம் மேற்கொள்ள எந்தவித வயது வரம்பும் கிடையாது பிறந்த குழந்தை தனது பெற்றோருடனும், முதியவர்கள் உறவினர் உதவியுடனும் அனைவரும் இந்த புனித பயணத்தை மேற்கொள்வர். முதியவர்கள் இந்த பயணம் மேற்கொள்ள அவர்களுக்கு தேவையான சக்கர நாற்காலி மற்றும் சகல வசதிகளும் அவர்களுக்கு இங்கு செய்து தரப்படுகிறது. இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் மிகப் பெரிய நிறைவாக கருதப்படும் இந்த புனித பயணம் மேற்கொண்டு திரும்பி வரும்போது பிறந்த குழந்தையாக திரும்பி வருவது போல் உணர்கின்றனர். மேலும் அவர்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் மிகவும் உற்சாகமளித்து நிறைவுடன் திரும்புகின்றனர். எனவே இஸ்லாமியர்கள் அனைவரும் நாளுக்கு நாள் ஆர்வத்துடன் இந்த பயணத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தலைமை செய்திப் பிரிவு.

வணக்கம் பாரதம் 24×7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *