வடகொரியா செப், 29
அணுசக்தி கொள்கையை தீவிரப் படுத்த ஏதுவாக வடகொரியா அரசு தனது அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுதங்களை சேர்த்து வரும் கிம், சமீபத்தில் ரஷ்ய அதிபரை சந்தித்தார் இதன் தொடர்ச்சியாக அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் திருத்தம் செய்த நிலையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.