பெங்களூரு செப், 25
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது எதிர்த்து பெங்களூருவில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் எதையும் சாதிக்க முடியாது என கர்நாடகா சட்டத்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் சாமானிய மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என கூறிய அவர் போராட்ட சூழலை சமாளிக்க ஆயுதப்படை காவல்துறையினர் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.