கர்நாடகா செப், 25
தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அங்கு ஆளும் கட்சியாக உள்ள பி ஆர் எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மகபூப் நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.