பெங்களூரு செப், 25
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது கண்டித்து பெங்களூருவில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது இதனை எதிர்த்து நாளை காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள முழு அடைப்புக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் தனியார் பள்ளிகள் சங்கம் உட்பட 50-க்கும் மேலான சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.