கர்நாடகா செப், 24
தமிழ்நாடு கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை கடந்த சில வாரங்களாக உச்சமடைந்துள்ள நிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது காவிரி என்ன தமிழ்நாட்டின் சொத்தா? காவிரி கர்நாடகாவில் பிறக்கிறது. அதில் உள்ள தண்ணீரை கர்நாடக அரசு அணைகள் கட்டி சேமித்து வருகிறது. இதற்கான அனைத்து செலவுகளையும் கர்நாடகா செய்யும் நிலையில் தமிழ்நாடு தண்ணீர் பெறுகிறது என்றார்.