நெல்லை ஆகஸ்ட், 19
தமிழறிஞரும் பேச்சாளருமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் நேற்று காலமானார். அன்னாரது உடலுக்கு வருவாய் மற்றும் போரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நெல்லை கண்ணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பசரவணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜூ, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, திருநெல்வேலி வட்டாட்சியர் செல்லசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் நெல்லை கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.