சென்னை செப், 5
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பதவியில் நீடிப்பதற்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது.