புதுடெல்லி செப், 4
காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்த பாரத் ஜோடோ யாத்திரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி தொடங்கினார். 145 நாட்களில் சுமார் 40,00 கிலோமீட்டர் கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் இந்த யாத்திரையை நிறைவு செய்தார். இந்நிலையில் யாத்திரையின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி செப்டம்பர் 7ம் தேதி மாவட்ட அளவில் ஊர்வலங்களில் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.