புதுடெல்லி ஆக, 29
ராகுல் காந்தி அடுத்த மாதம் ஐந்து நாட்கள் பயணமாக ஐரோப்பாவிற்கு செல்ல உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களை சந்திக்கும் அவர் செப்டம்பர் எட்டாம் தேதி பாரிஸில் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 10 தேதி இந்திய புலம் பெயர் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர்.