சென்னை ஆக, 29
அதிமுக செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக சசிகலா தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 30 விசாரிக்க உள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுகவிலிருந்து நீக்கியதை ரத்து செய்யக் கோரிய சசிகலாவின் மனுவை உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்தது. உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு சென்றிருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.