சென்னை ஆக, 28
கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. முன்னதாக இவரது நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 முடிவடைவதாக இருந்த நிலையில் நீதிபதி அல்லி நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைய உள்ள நிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர் படுத்தப்படுவார் என தெரிகிறது.