புதுடெல்லி ஆக, 29
இரு நாடுகளிடையே உறவுகள் குறித்து பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புத்தினுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது புதின் அடுத்த மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்க முடியாது என மோடியிடம் கூறியதாக தெரிகிறது. ரஷ்யா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது. முன்னதாக பிரிக்ஸ் மாநாட்டிலும் புதின் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.