புதுடெல்லி ஆக, 25
சந்திராயன்-3 திட்ட வெற்றிக்கு காரணமான விஞ்ஞானிகளின் சாதனைகள் பிரதமர் மோடி புகழ் தேட முயல்கிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தனது ட்விட்டரில் சந்திராயன் 3 திட்டத்தில் பணியாற்றிய ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் இன்ஜினியர்களுக்கு 17 மாதங்களாக சம்பளம் வழங்காத பிரதமர் மோடி பெருமையை தட்டி செல்ல நினைப்பது தவறு எனக் குறிப்பிட்டுள்ளார்.