புதுடெல்லி ஆக, 25
ரூ.7800 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய இராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாராகும் எம்ஐ 17 V5 ஹெலிகாப்டர், சிறிய ரக எந்திர துப்பாக்கி, பீரங்கிகள் உள்ளிட்ட முப்படைகளுக்கு தேவையானவை இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.