இமாச்சலப் பிரதேசம் ஆக, 26
இமாச்சலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது நேற்று பாலட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மரனவாலா பாலம் இடிந்து விழுந்தது. மாநிலம் முழுவதும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 709 சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், குல்லு மாவட்டத்தில் சுமார் 8க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.