புதுடெல்லி ஆக, 23
நாட்டின் தேசிய அடையாளமாக சச்சினை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. விரைவில் நடக்க உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பணிகளில் நேர்மையான தேர்தல் ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை சச்சின் ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட உள்ள அவர் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த அடையாளத்துடன் இருப்பார்.