புதுடெல்லி ஆக, 24
நிலவை ஆய்வு செய்த பின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் கவனம் செலுத்த இஸ்ரோ முடிவெடுத்துள்ளது. இதற்காக 2020ல் வகுத்த ககன்யான் திட்டத்தை இஸ்ரோ மீண்டும் கையில் எடுக்க உள்ளதாம். விண்வெளியில் மூன்று வீரர்களை மூன்று நாட்கள் தங்க வைத்து பிறகு பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் இந்த திட்டத்திற்கு தேவையான பணிகளையும் 2024க்குள் செய்து முடிக்க அறிவியலாளர்களுக்கு அடுத்த டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.