சென்னை ஆக, 24
விவசாயிகளிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என Nafeed, NCCF மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த பதுக்கலை தடுப்பு, ஏற்றுமதி வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் விவசாயிகள் பாதிப்படைவதை தடுக்க வெங்காயத்தை அதிக விலைக்கு வாங்கவும் அரசு முடிவுவெடுத்துள்ளது.