சென்னை ஆக, 24
உலகமே மிகுந்த உற்சாகத்துடன் எதிர்பார்த்த சந்திராயன் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதுவரை யாரும் தரையிறங்காத நிலவின் தென் துருவத்தில் விக்ரம் கால் பதித்தது இதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் புகழ் மேலும் பரவியுள்ளது. சந்திராயன்-3 வெற்றியை நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இந்த பெருமையை பெற்றுள்ளன. இந்தியாவின் இந்த சாதனைக்கு முதல்வர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் ரவி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இபிஎஸ், ஓபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.