சென்னை ஆக, 25
தமிழகம் முழுவதும் உள்ள 31,008 அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இன்று விரிவாக்கப்படுகிறது. இத்திட்டத்தை திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் படித்த பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். கட்சி பேதமின்றி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று இத்திட்டத்தை தொடங்கி வைக்குமாறு முதல்வர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.