புதுடெல்லி ஆக, 22
2022ல் மத்திய உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக மட்டும் அதிகப்படியான புகார்கள் வந்திருப்பதாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் தகவல் தெரிவித்துள்ளது. சிவிசி வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் மொத்தம் வந்த 46 ஆயிரத்து 643 புகாரில் 23,919 தள்ளுபடி செய்யப்பட்டு 22 724 புகார்கள் நிலுவையில் இருக்கின்றன எனக் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஊழியர்கள் மீது மொத்தமாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 23 புகார்கள் வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.