புதுடெல்லி ஆக, 22
உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இளம் வீரர் பிரக்யானந்தாவுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவில் FIDE Word Cup 2023 ல் இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்கும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள் அபாரமான செயல் திறனுடன் ஜொலித்துக் கொண்டே இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.