புதுடெல்லி ஆக, 20
சிற்பி, குயவர் உள்ளிட்ட 18 பாரம்பரிய கைவினை தொழில் புரிவோரை முன்னேற்ற விஸ்வகர்மா யோஜனா என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது. செப்டம்பர் 17ம் தேதி தொடங்கப்பட உள்ள திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களுக்கு முதல் தவணையில் ஒரு லட்சம் வரை வட்டி இல்லா கடன், இரண்டாவது தவணையில் 2 லட்சம் வரை 5% வட்டியில் கடன் உதவி வழங்கப்படும். பொது சேவை மையங்களில் முன்பதிவு செய்து இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.