கேரளா ஆக, 20
கேரளா மீது மத்திய அரசு பாகுபாடாக நடந்து கொள்கிறது என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது வருமானத்தில் 70% நிதியை மத்திய அரசுக்கு, கேரளா வரியாக கொடுத்து வருகிறது. ஆனால் முப்பது சதவீதம் மட்டுமே மத்திய அரசிடம் திரும்ப கிடைக்கிறது. மேலும் கேரளாவுக்கு மத்திய அரசு வழங்கும் மானியத்தில் 80 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.