சென்னை ஆக, 18
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை திருமாவளவன் தனது twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திருமாவளவன் நேற்று 61வது பிறந்த நாளை கொண்டாடினார். நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பது பேசும் பொருளாக உள்ளது.