மண்டபம் ஆக, 18
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவர் மாநாடு நடைபெற உள்ளது. இதில் 13,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். திமுக தென்மண்டலத்தில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று ராமநாதபுரம் பேராவூரில் நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து திமுகவினருக்கு அறிவுரை வழங்கினார்.