மணிப்பூர் ஆக, 16
மணிப்பூரில் வன்முறையால் வீடுகளை இழந்த மக்களுக்காக 3000 தற்காலிக வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை விரைந்து முடிக்கும்படி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தற்காலிக வீடுகள் மாநிலத்தின் ஐந்து இடங்களில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது வீடு இல்லாமல் நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்கள் விரைவில் இந்த தற்காலிக வீடுகளில் குடியமர்த்தப்படுவர்.