புதுடெல்லி ஆக, 16
நீட் தேர்வை அரசியலாக விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் மருத்துவக் கல்லூரியை நினைத்து கூட பார்க்க முடியாத தமிழக கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால்தான் மருத்துவம் படிக்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும், புதிய தேசிய கல்விக் கொள்கை எந்த மொழியையும் திணிக்கவில்லை என்று கூறியுள்ளார்.